கலைக்கப்பட்ட காதல்
மண்ணிலிருந்து துளிர்த்து வளர
முடியாமல் அழுகிய மலட்டு விதை ...!
கனியாய் காய்க்க முடியாமல் மலராய்
மலர முடியாமல் உதிர்ந்த மொட்டு ...!
குழந்தையாய் உருப்பெறாமல் கருவிலேயே
அழிக்கப்பட்ட என் கரு ...!
முதற்புள்ளியாய் தோன்றிய கணத்திலேயே
முற்றுப்புள்ளியாய் மாறிய புள்ளி ...!
கோலமாய் போட துவங்கிய தருணத்திலேயே
நிராகரிக்கப்பட்ட அலங்கோலம் ...!
நாம் எனும் இரட்டை எழுத்து
நாங்கள் எனும் நான்கு எழுத்தாய்
உருப்பெறாமல் கண்ணீர் எனும்
நான்கு எழுத்திலேயே விடைப்பெற்றது ...!
காதல் எனும் மூன்றெழுத்து
உலகம் உருவாகும் முன்பே
கனவு எனும் மூன்றெழுத்து
உலகுடனே கலைந்து போனது ...!