என் இதயம் அறிவற்றது
என் இதயம்
அன்பே அறிவற்றது
அதனால் தான்
அன்பை கொடுத்து....
வேதனையை பரிசாக வாங்கிறது.....
ஆனால் அது உண்மையானது
பெண்ணே! அதனால் தான்
நீ வேதனைபடும் போது
மீண்டும் அன்பை தர
எனக்கு ஆணை இடுகிறது!
என் விழிகளோ
பெண்ணே தைரியம் அற்றது....
அதனால் தான்
உன்னை பார்த்தால்....
பேசாமல் நின்றுவிடுகிறது....
ஆனால் அன்பே!
அது உண்மையானது
அதனால் தான்.......
நீ பார்க்கா விடினும்
உன்னை மட்டுமே பார்க்கிறது!
பூவே! என் உதடுகளோ
உன் முன் உயிர் அற்றது
அதனால் தான்
நீ வேண்டும் என்று உன்னிடம்
கேட்டு தடுமாறுகிறது
ஆனால் உயிரே அது
உண்மையானது
அதனால் தான் உன் பெயரை பார்த்தால்
அடுத்த நொடி உச்சரிக்க
உயிர் பெறுகிறது
பெண்ணே உன் மீது நான்
கொண்ட காதல் எல்லை அற்றது
அதனால் தான்
..இன்றும்....என் இமைகளின்
எல்லையை தாண்டி .......
கண்ணீர் நடமாடுகிறது!