இதிகாசத்தை பிணைந்தாள்
பாஞ்சாலியின் சேலையுருவி
சீதையின் மார்பை மறைத்து
ராமானின் வில்லையெடுத்து
கோதைகளை துரத்திய
விளையாட்டு இது
ராமன் செய்தால் தப்பு
கிருஷ்ணன் செய்தால் சரி
தப்பும் தவறுமாய்
இதிகாசங்களை இடித்துரைத்து
வேதாந்தம் பேசாதீர்கள்
உஷ் உஷ் உஷ்
என்
செல்லக் குட்டி
என்
பப்புக் குட்டி
என்
ஆசைக் குட்டி
என்
புஜ்ஜுக் குட்டி
களிமண் பொம்மைகளோடு
விளையாடுகிறாள்
கவிதைக்காரர்களே
தொந்தரவு செய்யாதீர்கள்
என் குழந்தையை
அடுத்து விளையாட்டாம்
சொல்லிவிட்டு ஆரம்பித்து விட்டாள்
ராமனையும் கண்ணனையும்
ஒரு சேர பிசைகிறாள்
இப்போது இயேசுநாதர் இணைகிறார்
புத்தன் சாமியும் கலக்குகிறார்
அக்பர் பொம்மையும் நனைகிறது
எல்லாம் என் பொம்முக்குட்டியின்
கைவண்ணத்தில் சேதமாகி
ஒன்றுப்பட்ட தேசமாகிவிட்டதே !
அடடே !
கைதட்டுங்களேன்
என் அம்முக்குட்டியின்
மாமாக்களே, அத்தைகளே
தாத்தாக்களே , பாட்டிகளே
கைதட்டுங்கள்.
சிறப்பு பரிசாய் காத்திருக்கிறது
என் குட்டிப்பாப்பாவின்
எச்சில் முத்தங்கள்!