நாட்டுக்கோழி

நாட்டின் மூத்தக்
குடிமகள் நீதான் காரணம்
நாட்டுப்பற்றுக் கொண்ட
உனது பெயர்...

பொறுமைக்கே பெருமை நீ
'அடைகாக்கும் பொழுது'...

சோளத்தில் கோலமிட்டேன்
உனக்காக..அதில்
கேழ்வரகில் வண்ணமிட்டேன்
உனக்காக...

என் பேரக்குழந்தைகளுக்கு
உயிருள்ள பொம்மை நீ...

இவ்வுலகில் அடக்கத்தின்
அடையாளம் நீ...

கொதிக்கும் தரையில் கூட
பூமித்தாய்க்கு வலிக்காமல்
அடிவைக்கும் உன்
பாதங்களும் இன்று
கொதிக்கும் குழம்பில்
மிதக்க வேண்டிய கட்டாயம்...

என்ன செய்வது தினம் தினம்
வீட்டு மாடியில் நீ
விரட்டிய காகம் உன்னைப்
பழிவாங்க கறைந்துவிட்டது...

வீட்டு வாசலில் என்
மகளும் மூத்த
மருமகனும்...

[பெற்றெடுத்த பிள்ளைகளை
மட்டுமல்ல...விறகு
விற்றெடுத்த சில்லரைகளில்
வாங்கி வளர்க்கும் அனைத்து
உயிர்களையும் காப்போம்..]


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (18-Mar-15, 7:40 pm)
பார்வை : 225

மேலே