பாசத்தின் பயணம் தேடி 0083
உயிர் தந்த தாயே! உதறி விட்டாய்
ஊர் பழிக்குமென அஞ்சி
என்னைத் தெருவில் இட்டாய்
முந்தானை விரிக்க அஞ்சாத நீயோ!
முலைப்பாலின்றி தவிக்கச் செய்தாய்
முந்தானைத் தொட்டில் கட்டவுமில்லை
முட்டியில் சுமந்து பசியாற உணவு உண்டதுமில்லை
மணல் வீடு கட்டி மகிழ்ந்ததுமில்லை
தாலாட்டி உறங்க பாக்கியமும் இல்லை
மனதில் உள்ள கவலைகளைக்
கொட்டித்தீர்க்க தாய்மடியுமில்லை
பாசத்தின் பயணம் செல்ல
பாதகன் நான் எங்கே செல்ல!
உற்றாரென்று ஓடிப்போக
பெற்றவள் அறியா பிள்ளை
நான் எங்கு போவேன்
யாரிடம் என் நிலை என்னவென்று சொல்வேன்