காதல் குறிப்புகள்….



அமாவாசை கும்மிருட்டு
தாண்டி போகிறது ஒரு நட்சத்திரம்
அட... உன் மூக்குத்தி..!

கசங்கி எறிந்த காகிதங்கள்
தீர்ந்துபோன பேனா மை
.....இன்னும் எழுதப்படாத என் காதல்

நான்கு நாட்களாக மழை
குளிரில் நடுங்கும் சிறகுகள்
மூடிய உன் ஜன்னலருகே.... நான்

எழுதியவர் : muruganandan (28-Apr-11, 9:28 am)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 574

மேலே