உனக்காக கலங்குதடி விழிகள் இரண்டும் 555

என்னுயிரே...

நான் பாசம் வைத்த
உறவுகள் எல்லாம்...

என்னைவிட்டு விலகியே
நிற்கிறது...

என்னையும் என் அன்பையும்
புரிந்துகொள்ள எவரும் இல்லை...

நினைக்கும் போது என்
விழிகள் கலங்கவில்லை...

நீயாவது இருக்கிறாய்
என்று இருந்தேன்...

நீயும் என்னைவிட்டு
விலகியே நிற்கிறாய்...

நீயும் புரிந்துகொள்ளாத
போதுதானடி...

கலங்குது என் விழிகள்
இரண்டும் உனக்காக...

உறவுகளின் பிரிவில்
கூட வலிகள் இல்லையடி...

முதல் காதலின் பிரிவை
தாங்கும் இதயதிற்க்கே...

வலிகள் அதிகம் தானடி
எப்போதும்...

புரிந்து கொள்வாயா
என் அன்பையாவது...

.....நீ.....பிரியமுடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Mar-15, 9:01 pm)
பார்வை : 465

மேலே