கிராம இராஜ்யம்
கிராமராஜ்யம்
காந்தியின் கிராமராஜ்யம்
காண்பதுவும் எந்நாளோ!!
கிராமங்கள்தான் இந்தியா"
கேட்கத்தான் இனிக்கின்றது"
உலகிற்கே ஆதாரம்
உயிரதுதான் கிராமங்கள்.
சேறாக்கக நீரில்லை
சோறாக்க விறகில்லை
ஏறுகள் உடைக்கப் பட்டு
விறகாகி எரிகின்றன
ஆறுதூர்ந்து வறண்டன.
ஆளில்லா கிராமங்கள்
நீரின்றி மூலையோ!
நிலம் வறண்ட பாலையோ!
நாடழித்து வெள்ளம் ஓடி
நிறையும் கடல் கோடியோ!
நதிகளும் இணைவதேப்போ?
நாடு வளம் ஆவதெப்போ?
விவசாயம் இலாபமில்லை..
விடுதலை உழவுத்தொழில்.
விளைவித்த பொருளுக்கும்
விலைசொல்ல உரிமையில்லை.
விவசாய இடுபொருட்கள்
விலையேறிக் கட்டவில்லை.
கடனாளி ஆகி விட்டார்.
காலனிக்கு கழனி விற்றார்.
இன்னுமென்ன செய்திடுவார்?
இடிந்துமே முடங்கிவிட்டார்.
இந்தியாவின் முதுகெலும்போ
இப்பபடித்தான் நொறுங்கியதோ!
வழியேதும் காணலாமோ!.......
வாடிநிற்கும் உழவனுக்கும்?
மீட்டெடுக்க வில்லையெனில்
நாட்டிலேது பொருளாதாரம்?.
இழந்தவற்றைத் தந்திட்டாலே
எழுந்திடுவான் விவசாயி.
விவசாயிகள் கூடிவிற்கும்
விளைபொருள் சந்தைகளும்
விரிவாகிப் பெருகட்டும்.
வரவுசெலவுக் கணக்கிட்டும்
இலாபம் பார்த்து விற்கட்டும்.
இடைத்தரகர் ஒழியட்டும்.
வேளாண்மை பட்டுப்போனால்
ஆளாண்மை செத்துப்போகும்.
வாழவேண்டும் விவசாயம்..
வறுமையற்றுத் தொலையட்டும்..
இடுபொருட்கள் உதவினாலே
ஏற்றம்பெறும் உழவாண்மை.
பொங்கி வரும் காவேரி
தங்காமல் வரட்டுமே
மங்காமல் மின்சாரமும்
எஙகுமே கிடைக்கட்டுமே.
காந்திசொன்ன இராஜ்யமும்
காணுவோம் மகிழுவோம்.
கொ.பெ.பி.அய்யா.
.

