பூபாளம் பாடுது பூமியிலே
பூக்களின் இடையில் பூவிதழ் பாதமும்
----பூமியில் படுகையில் தெறிக்கும் நீரும்
பூரிக்குது நெஞ்சங்களும் காணும் காட்சியால்
----பூமகளின் வடிவம் உருவாகுது உள்ளத்தில் !
பூத்திட்ட புதுமலர் பூப்பெய்திய பொன்மகளென
-----பூக்குது புன்னகையும் புவியில் எவருக்கும் !
பூங்காவில் தீண்டிடும் புதுதென்றலோ இவளென
-----பூமழை பெய்திடும் புதுதெம்பும் பிறந்திடும் !
பூங்காற்றாய் வருடுது பொற்பாதம் கண்டதும்
-----பூகம்பமாய் வெடிக்குது நெஞ்சில் ஆவலும் !
பூந்தோட்ட மலர்களில் புதுமணம் கமழ்ந்திடும்
----பூங்குயில் முகம்காண உள்ளங்கள் துடித்திடும் !
பூபாளம் பாடுது பூமியிலே உள்ளங்களும்
----பூகோளம் வியக்குது மலர்பாதம் கண்டதும் !
பூக்கோலம் காணுது காண்பவரின் இதயங்கள்
----பூச்சொரிதல் நிகழுது அனைவரின் மனதிலும் !
பழனி குமார்