இது பெண்மையின் தேசமோ

முந்தானைகளை தொலைத்து
சிறுதுண்டுகளை போர்த்தும்
நாகரிகம் மறைந்த பிறகும்,
திரண்ட அங்கங்களை
உடைக்குள் சிறைப்படுத்திய
சில மேற்கத்திய ரசனைகாரிகளால்
மட்டுந்தானா
கற்பழிப்புகள் நடைப்பெறுகின்றன?

ஓ! ராஜ ராஜசோழன் காலத்திலும்
சிந்துசமவெளி நாகரித்திலும்
மேலாடை இல்லா
பெண்டிரை கண்டாலும்
ஆண்களுக்கு ஈர்ப்புத்தன்மை
குறைவு போலிருக்கு.

ஜன கண மன பாடும்போது
மட்டுமே என் தேசம்
அமைதிப்பூங்கா வேடம் போடும்.

அந்த மயான நேரத்திலும்
ஏதோ ஒரு பத்திரிக்கையாளனுக்கும்
ஏதோ ஒரு காவல்துறைக்கும்
ஒரு சிறுமியின்
பள்ளி சீருடை கிழிக்கப்பட்ட
சத்தங்களால் எழுந்த
புகார்கள் கிடைக்கவில்லையெனில்
எங்கள் இந்தியா சத்தியமாக.
எங்கள் மகளிருக்கு
தாய் நாடே!

எழுதியவர் : அமுதினி (19-Mar-15, 2:07 pm)
பார்வை : 505

மேலே