என்றும் இயங்கு விழிப்போடு

என்றும் இயங்கு விழிப்போடு...!

அக்கம் பக்கம் பேசாதே - எங்கும்
அங்கே இங்கே அலையாதே....

அச்சம் துச்சம் கொள்ளாதே - அறிவு
விஞ்ஞானத்தை தள்ளாதே....

பட்டம் பதவிக்கு மயங்காதே - - .நாளும்
பண்ணை இசைக்க மறவாதே....

புத்தி கொண்டே போராடு -எதிலும்
முந்தி நிற்கவே நீயோடு....

மூப்பை எதிர்த்தே நீ பாடு -
எதையும்
மும்முரமாய் முனைந்து நீ தேடு....

ஆய்ந்த செயலால் நாளோடு -
ஆற்றலில்
ஆர்த்தெழுவாய் அழகோடு....

வில்லாய் வளைந்து பாடுபடு - - .என்றும்
அவ்வயலின் நெல்லாய் நீயாடு....

தாழ்வே நீக்கும் தடந்தோளால் - - . . . . . . எதையும்
தள்ளி சிறப்பாய் அன்போடு...

முற்றும் ஏற்றம் பெறுதர்க்காய் - - . . . முயன்று
என்றும் இயங்கு விழிப்போடு...!

எழுதியவர் : இராக. உதய சூரியன். (19-Mar-15, 6:17 pm)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 75

மேலே