கண்ணீரில் மறையும் பகல் கனவுகள்

தொலை தூர வானில்
தொட்டுவிட முடியாத இடத்தில்
தொலைந்து போன கனவினை
சொல்லிவிட நினைக்கின்றேன் .

ஆழ்கடலின் நடுவினில்
அலைகளின் மோதலில்
உடைந்து விட்ட ஓடமாய்
கரை சேர தவிக்கின்றேன் .

இரண்டு கால் நரிகளின்
ஈன எண்ணங்களின் மத்தியில்
மானம் காத்திட வேண்டும் என்று
மண் புழுவாய் துடிகின்றேன் .

ஒளி தேடும் விழிகளின்
இருள் விலகிட வேண்டுமென
எரிகின்ற மெழுகாகி
என்னையே அழிக்கின்றேன்.

காலம் கடந்த பின்
காப்பாற்ற எவர் உண்டு
கன்னியின் பகல் கனவை
கண்ணீரில் மறைக்கின்றேன் ..!!

எழுதியவர் : கயல்விழி (19-Mar-15, 6:27 pm)
பார்வை : 171

மேலே