காதல் சங்கீதம்

மலர்ந்த தாமரையை எடுத்து
ஒரு நரம்பு கட்டி வீணை செய்தேன்
அதற்கு -
மாதிரியாய் அமைந்தது
மங்கை அவள் நேர் வகிடு....

இசைத்தேன்
காதலை

சிரித்தாள்
ரசித்தேன்......!

தேன் தேன் தேன்
நான் என்னை இழந்தேன்

என்று ஒரு கவிஞன்
ஏற்கனவே எழுதியது நினைவில் வர

மகிழ்ந்தேன்....!!

எழுதியவர் : ஹரி (19-Mar-15, 11:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kaadhal sangeetham
பார்வை : 114

மேலே