அவளது முகம் ஒரு அழகிய கவிதை
மூன்று வானவில்கள்
முழு நிலவில் தோன்றக் கண்டேன்
இரண்டு புருவங்களாகவும்
ஒன்று கோணல் வகிடாகவும்
அவள் அழகிய முகத்தில்.....!!
அப்போது மின்னல்
அவளது சிரிப்பு
அழகிய பின்னல்
அர்த்த ராத்திரி வனப்பு...!!
பின்னிப் பிணைந்ததாய் கவிதையும் ரசனையும்
பிரியச் சொல்கிறோம் காற்றின் இடைவெளியை....!!