வலி

ஒன்றாம் பக்கம்
உளறலாய் தொடங்கியது ..
இரண்டாம் பக்கம்
இனிமையாய் இளித்தது ..
மூன்றாம் பக்கம்
மூக்கில் விரல் வைத்து
விறைக்கசெய்தது ..
நான்காம் பக்கம்
நகங்களை போல்
உறுத்தியே வளர்ந்தது ..
ஐந்தாம் பக்கம்
ஆறறிவையும் மறைத்து
அன்பை வேரறுத்து ..
ஆறாம் பக்கம்
ஆற்றா வடுக்களை
அரங்கேற்றியது ..
ஏழாம் பாகம்
ஏகதாளம் காட்டி
இன்புற்றது ..
எட்டாம் பாகம்
எட்டி நின்று
ஈட்டி எறிந்தது ..
ஒன்பதாம் பக்கம்
ஓடை ஓட்டிய
அலைகளாய் மிதந்தது ..
பத்தாம் பக்கம்
பரிவையும் காட்டி
பரிதவிக்கிறது ..
திரும்பி பார்க்கின்றேன்
பத்தே பக்கங்களில்
பகடையாய் உருட்டி
ஓடிய நட்பை .. :- p^z
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
