நான் உன்னை காதலிக்கவில்லை
இதயம் பிய்த்து
அதை யாரோ கல்லில் அடித்து
கிழிப்பது போன்ற ஒரு உணர்வு!
சுவாசம் உள்ளே போக
தடை யாரு விதித்ததோ
தெரியவில்லை!
திடீரென வாழ்வு பாதையின்
விளக்குகளில் வெளிச்சம் இல்லை!
தள்ளாடி நடப்பவனின்
தலைமேல் பாரம் ஏற்றியது
போல் ஒரு சுமை!
இறக்கை அறுந்த பறவை
எந்த திசையில் பறந்து செல்லும்?
பிணத்தின் மேல் விழுந்த பூக்கள்
எந்த வாசம் வீசினால் என்ன?
ஒரு சொல்லுக்கு எவ்வளவு வலிமை!
நீ அதை சொல்லி இருக்க வேண்டாம்!
பதிலாக
எனை கொன்றிருக்கலாம்!