என் வாழ்வு அவளோடு மட்டுமே - உதயா
((((((தோழர்களே, தோழிகளே என் காதலியின் படம் தான் இது . அவளுக்கு மருந்தே இல்லாத ஒரு வியாதி ..அவளுக்கு மரணம் நிச்சயமாகி போனது இன்னும் ஒருவருடமோ இரு வருடமோதான் அவள் வாழ் காலாம் ..ஆனால் என் கடமைகள் முடிய நான்கு வருடம் காலம் தேவை படுகிறது ....அவள் அதுவரைக்கும் என்னுடம் இருக்க கடவுளிடம் எனக்காக கொஞ்சம் ஒரு நொடி வேண்டிக்கொள்ளுங்கள் ...
என் கடமைகள் முடிந்த பின்னே நானும் அவளுடனே பறந்து செல்வேன் ....இப்படிக்கு உதயா )))))
பூக்களும் கரமேந்தி கெஞ்சுமடி
உன் புன்னகையை கற்று தர கேட்டு
தென்றலும் கால் பிடித்து அழுமடி
உன் மெல்லிய நடையை என் மேனியாக்கென்று
கார்முகிலும் மறுபிறவியில்
உன் கூந்தலாய் பிறக்க வரம் கேக்குதடி
விண்மீன் கூட்டமும் உன் வாயினுள்
பற்களாய் திணிய பிச்சை கேக்குதடி
புல் நுனியில் பூத்திருந்த
குளிர்கால பனி நீரும்
வெயிகால வேளையில்
உன் முகத்தில் பன்னீராக துடிகுதடி
மரங்களின் கிளைகளில்
மழலையை ஈன்ரெடுக்கும்
மாருதமும் உன் இடையாக
தவம் இருக்குதடி
அனைவரையும் உதறிவிட்டு
என்னை உன் உதிரத்தோடு
அனைத்துக் கொண்டாயேடி
உதயா நீதாண்டா என் உயிரென்றே
தோல்விகள் என்னை
தொடர்ந்து பந்தாடினாலும்
என் தலையை உன் மடியினில் வைத்து
வெற்றியின் இரகசியங்களை போதித்தாயே
தோய்ந்த என் மனதினில்
உன் தெகட்டா ஒரு முத்தத்தில்
ஓராயிரம் சிறகுகளை
முளைக்க வைத்தாயே
காமத்தின் மோகத்தினை
காற்றினில் கரைத்துவிட்டு
காதலுக்கு புது
காவியம் படைத்தவளே
விண்ணையும் மண்ணையும்
இரு கண்ணாக கொண்டவளே
உன்னை விரைவில் விண்ணுலகம் தேடிவாயென
காலன் அழைப்பது ஏனோ ???
காலன் ஐயா அவர்களே
என் இதயத்தின் அறைகளை
அல்லி இதழாக கிழித்து
உன் கால் மீது தூவுகிறேன்
என் தேகத்தின் பாகத்தினை
தேனாக உருக்கியெடுத்து
உனக்கு படையலாக்குகிறேன்
என் குருதியின் நாளத்தினை
குத்துவிளக்கு திரியாக்கி
உனக்கு முப்பொழுதும் பூஜை செய்கிறேன்
என் உயிர் அவளை
இன்னும் சிலகாலம்
என்னுடம் வாழ அனுமதி கொடு
அவளின்றி நான்மட்டும்
ஒரு நொடி வாழத்தான் முடியுமா ???
இல்லை அந்நொடியை
நினைத்துதான் பார்க்கமுடியுமா ???
என் கடமைகள்
முடியும் வரையாவது
அவளை என்னுடன்
வாழவிடு
இல்லையேல்
அவள் வாழும் காலத்திற்குள்
என் கடமை முடிய
வழிகாட்டிவிடு
நான் வாழ்ந்தாலும்
அவளுடனே
நான் மாய்ந்தாலும்
அவளுடனே ....