என் தனிமை
பெருத்த
புயலொன்றில்
புதர்களின் அடியில்
சதுரங்க காய்களை
நகர்த்திக்கொண்டிருக்கலாம்!!
நதிகளோடு
நீந்திவரும்
நீர்குமிழிகளை
சிதறடித்து விளையாடி_
கொண்டுமிருக்கலாம்!
குருவிகளின்
சப்தங்களை
கோர்த்து ஓர்
இசைமேடையில்
தனித்திருந்து
பாடிக்கொண்டுமிருக்கலாம்!!
வர்ணங்களால்
நிறைந்து வழியும்
ஹீலியம் பலூன்களில்
ஆசைகளை நிரப்பி
பறக்கவிடலாம்!!
அழுகைகளுக்கு
அப்பாலும்
வலிகளால்
நிறைந்துவழியும்
ஓர் பிரிவை
சபித்துக்கொண்டிருக்கலாம்!!
வேற்றுக்கிரகத்தில்
மரமொன்றிற்கு
நீரூற்றியபடி
இருக்கலாம்!!
காரணங்களை
அறியாமலே
அவனையோ
அவளையோ
காதலித்துக்கொண்டிருக்கலாம்!!
ஓர் வானவில்லை
வெறித்து பார்த்தபடி
மழைக்கான
சூட்சுமத்தை
ஆராய்ந்து_
கொண்டுமிருக்கலாம்...
அவரவர் ஏகாந்த
நினைவுகளில்
ஏதோ ஒன்று
நடந்துகொண்டிருக்க!
என் ஏகாந்த
குடத்தின்
விளிம்புகளால்
வழிந்த கவிதைகளில்!
சிலது இறந்தன!
சிலது பறந்தன!
பலது அழுதன!
அதோ சிலது
அவளை நோக்கிய
பயணத்தில்
சிதயுண்டும்
திரும்புகின்றன!!
அழுகைகளுக்கு பதில்
கவிதைகள்
மட்டும் எழவே
சாத்தியப்படுகிறது
அத்தனை
தனிமைகளிலும்....