மீனவன் என்ன தீவிரவாதியா

மீனவன் என்ன தீவிரவாதியா?
ஊடுருவிட்டான் என உயிரை எடுக்க!

இதை கற்றுத்தரவே
காவித் தலைவன்
கடல் கடந்து - சென்றானோ?!!

கத்தியால் குத்திப்
பார்த்தவன் இன்று
முகத்தில் காரித்
துப்பியும் பார்க்கிறான்!

மானங்கெட்ட மத்திய
மாநில அரசுகளே
உண்மையில் உங்களுக்கு
சுரணை உண்டோ??!

ரணிலே உந்தன்
ரா(ஆ)ணுவத்தை
நசுக்கும் காலம்
தொலைவில் இல்லை!

இலட்சம் தமிழரின்
இரத்தம் குடித்தும்
அடங்காத வேட்கையை
உந்தன் உயிர் பறித்து
அடக்கிடும் நிலைக்கு
ஆளாக்காதே!

சாது மிரண்டால்
காடு கொல்லாது!
என்குடி திரண்டால்
உன் படை நில்லாது!

வந்தோரை வாழவைக்கும்
தமிழ் குணம் - எம்மை
சீண்டி பார்க்கையில்
சங்கை நெரித்திடும்
எந்தமிழ் சினம்!

எழுதியவர் : red (21-Mar-15, 7:08 am)
சேர்த்தது : சூரியா உதயன்
பார்வை : 78

மேலே