மகளிர் தினம்

மகளிர் தினம்


இந்தியா...
தாய்நாடு, தாய்மொழி
என்று
பெண்ணின் பெருமை
பேசும் நாடு!
வேதங்கள் நிறைந்த நாடு!
மாதொரு பாகனை
மகிழ்ந்தோதும் மணித்திரு நாடு!

இருக்கட்டும், இருக்கட்டும்...

இன்றைய இந்தியாவில்
மகளிர் நிலை என்ன?
இதற்கு விடையிறுத்து
இனிதாய் கொண்டாடுவோம்
மகளிர் தினம்.

தான்,
பெண்ணென பெண்
உணரும்முன்,
வல்லுறவு கொள்ளும்
வக்கிரம் ஒழிந்தபிறகு
வகையாகக் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!


நிர்பயாக்களின் பயணங்கள்
பயமின்றி தொடரட்டும்
பிறகு,
நிம்மதியாய் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!

அடக்குமுறைக்கெதிரான
ஐரோம் சர்மிளாக்களின்
அறப்போர் வெல்லட்டும்
பிறகு,
அமைதியாய் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!

களமாடிய,
எம்,
ஈழப்பெண்களின் கற்புடன்
விளையாடிய கயவர்கள் வீழ்ந்தபின்,
விருப்புடன் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!

மாதரை அடிமை செய்யும்
மதங்கள் மாயட்டும்
பிறகு,
மகிழ்வுடன் கொண்டாடுவோம்...
மகளிர் தினம்!

எழுதியவர் : கவிஞர், தஞ்சாவூரான் (21-Mar-15, 10:42 am)
Tanglish : makalir thinam
பார்வை : 125

மேலே