சில்லிட்ட 29
விதைக்குள் புதைந்த பின்
வேராகி விடுவது
போதி
வேறாகிவிட்ட போதும்
வேண்டும் என்பதே
பசி
புசிக்க கூடாத
பழம் ஒன்றை காட்டும்
கடவுள்தான் சாத்தான்
மனநலம் மாறுவது
மகத்துவ கருத்தரிப்பு
ஜன்னலும் பேருந்தாகிறது
தூரங்கள் தீர்வதும்
தீர்ந்த தூரங்களும்
தெவிட்டாத இன்னிசை
இசைக்கும் இன்றோடு
முடிகிறது
சித்தார்த்தனின்
சில்லிட்ட 29
கவிஜி