தபால் பெட்டி-சகி

சிவப்பு நிற சீமானே!
கருமை நிறத்தை இதழ்களாக
கொண்ட தகவல் காரனே !
தெருவின் ஓர் முனையில்
உன் இருப்பிடமே !
உறவுகளுக்கு பாலமான
சொந்தகாரனே !
விஞ்ஞான முன்னேற்றத்தில்
உன் முகவரி தொலைந்து
விட்டே வருகிறதே !
வருங்காலத்தில் உன்
முகவரியும் இல்லாமல் போய்விடுமோ ?