கானகம் காப்போம்

அடர்தருக்கள் அசையாகி
உலர்சருகோ தளையானால்
அடவிதானே கவிதை…!

பொதுவுடைமை கொள்கைதனை
புறந்தள்ளிய புண்ணியவான்கள்,
பொதும்பை பெயர்த்தெடுக்க
பொதுகொள்கை கொண்டார்களோ..?
 
பகுத்தறிவு இனங்களாய்
பகட்டாய் கொக்கரிப்போர்
பறித்த புறவினால்
பார் பாழும் அறிவீரோ..?
 
கானகம் கானலானால்..,
மாதம் மும்மாரி
சொன்ன நிலைமாறி
என்று வரும் மாரி
என்றாகும் சேதி...
ஏக்கம் எஞ்சும் மீதி...

மீறி வந்த மாரியோ
ஊறி கிடந்த தாதுவை
வாரி செல்லும் பரவைக்கு
வளநிலத்தினின்று வடிநீராய்...
 
சத்து பூமி
வெத்து பூமியாகும்...
மொத்த பூமியும் ஓர்நாள்
செத்த பூமியாகும்...
 

“வனம் இன்றி போனால்- உயிர்
இனம் இன்றி போகும்..”
 
வனங்களுக்காய் தினம் இன்று...
மனம் மாறுவோம் மன்பதைக்குள்...
தனம் சேர்ப்போம் தரணி தாய்க்கே... 

எழுதியவர் : அஞ்சா அரிமா (22-Mar-15, 12:23 am)
பார்வை : 752

மேலே