கடவுளே நீ கட்ட வேண்டிய கடன் பாக்கி எவ்வளவு

நான் முகனும் நாராயணனும்
நமச்சிவாயத்தை காண இயலவில்லை - ஆனால்
நம் அறிவு விஞ்ஞானத்தோடு இணைந்து
நடுங்க வைக்கும் டைனோசரை அறிய வைத்தது...!

உருவாக்கியது எது ? உருகிப் போனது எது ?
உண்மை எது ? பொய் எது ? புரியவில்லை ....!!

இரண்டாம் தேதியே மாசக் கடைசி
இது மட்டுமே உண்மை என்று தெரிகிறது....

அதோ வருகிறான் கடன் காரன்.....

அதனால் நானும் பரம்ஜோதி வடிவமாகிறேன்.....

என் முகத்தையும் அவனால் காண முடியாது

எப்படி ஓடுறேன் பாருங்க இப்போ ஸ்பீடா

என் பாதத்தையும் அவனால் பார்க்க முடியாது.......!!

எழுதியவர் : ஹரி (22-Mar-15, 8:15 am)
பார்வை : 72

மேலே