ரிடையர் கேஸ்

அய்யய்ய
அது பேஜார்
கேஸ்ப்பா.

பெருசு
கரார்
ஆளுப்பா.

அட்வைஸ் வண்டி
வந்துகினுகீது
பாருப்பா.

நியூஸ்ல
மூழ்கிட்டாரு
பசிக்காது மனுசனுக்கு.

இன்னாத்துக்கு
உம்முன்னுகீதுனே
தெர்ல.

கொய்ந்தக் குட்டியும்
கெட்யாதுயா
அந்த ஆளுக்கு.

சாமி இல்லனு
சொன்ன பாவம்
வாரிசு இல்ல.

வயசு ஆனாலும்
திமிரு குறையல
குசும்புகீது பா.

வராருய்யா
வணக்கம் போடு
ஏதுனா செய்வாரு.

இலஞ்சம் வாங்கியதே
இல்லை அந்த மனிதர்
தன் பணிகளுக்கு.

இப்போது..

அந்தத் தெரு
குழந்தைகளுக்கு
அவர் மிட்டாய் தாத்தா.

வீடியோ கேம் ஆட
கற்றுக்கொள்கயில்
பப்ளுவிடம்
திட்டுவாங்குவதில்
திருப்திப் படுவார்.

சூப்பர்மேன் கதைகளை
நடித்துக்காட்டி சொல்வதாலே
குழந்தைகளின் கூட்டம்
அவரைச்சுற்றி.

விளையாட்டின் போக்கை
கணிக்கும் திறமையால்
இளைஞர்களுக்கும்
பிடித்தவரானார்.

போனவாரம் நடந்த
கிரிக்கெட் டோர்னமன்டில்
நடுவராக பதவியுயர்வுப்
பெற்றதில் மகிழ்ச்சியவருக்கு.

ரிடையருக்கு அப்புறம்
மனுசன் சிரிக்கப் பழகிட்டாரு.
மனதிலிருந்து வணக்கம்
பெறுகிறார் மக்களிடம்.

அறுபதைத் தொடுகின்ற
இராஜசேகரன் ஐயா
மீண்டும் குழந்தை.
துடிப்பாக இளைஞன்.
தொடர்கிறார்
தனது வாழ்க்கையை.!!
--கனா காண்பன்

எழுதியவர் : கனா காண்பவன் (22-Mar-15, 8:46 am)
பார்வை : 112

மேலே