அம்மா

தன்னில் கரு
உதித்த கணமே
கனவுகளில் என்னை
கட்டி அனைத்து கொஞ்சி
பேசியவள், கருவறையில்
எந்தன் வளர்ச்சியை நாளும்
தொட்டு ரசித்தவள்,
நான் உறக்கம் கலைத்த
இரவுகளிலும் எனை எண்ணி மகிழ்ந்தவள், நான் இவ்வுலகில்
பிறவி எடுக்க உயிர் வலி
கொண்டு மறுபிறவி
எடுத்தவள், என் உயிரிலும் உதிரத்திலும் கலந்த
"ஆத்ம ஜீவனே"
உனை எழுத வார்த்தைகள் எதுவுமில்லை இதை தவிர்த்து "அம்மா"