ஹாஹாஹாஹா நகைச்சுவையல்ல

பசிக்கிறதென்று
யாசிக்கும் குழந்தைக்கு
கையில் அப்பத்தோடு
சில்லறையில்லை
என்றே பதில் சொல்வான்
அந்த தங்கமோதிரக் காரன்.

ஹாஹாஹா...

பல்லைக் கடித்துக்கொண்டு
சிரிக்கத் தொடங்குவான்
அங்கிருக்கும் ஒரு
அழுக்கு உடை
கிறுக்குக் கவிஞன்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (23-Mar-15, 12:30 am)
பார்வை : 62

மேலே