ஹைக்கூ
குழந்தைச் சிரிப்பு
ஒரு
ஹைக்கூ
பறவையில்லா வானம்
கீழே
துப்பாக்கி சூடு
தண்ணீர் லாரி வந்தது
மோதிக்கொண்டன
காலிக் குடங்கள்
நாய்க்கு செல்லப் பெயர்
மகனை அழைத்தார்
நாயே
இந்திய மரம்
காய்த்துத் தொங்குகிறது
தொட்டில்கள்
மலையானபோது தெரியாத மானம்
சிலையானபோது
தெரிந்தது
வெற்றியில் நண்பன்
என் தோல்வியும்
இனித்தது
மருந்தாய் தங்க பஸ்பம்
போதும் போதும் என்றது
மனம்
தந்தேன் காதல் கடிதம்
தந்தாள்
திருமண அழைப்பிதழ்
அழைத்து உண்டது காகம்
உண்ட பின் அழைத்தான்
மனிதன்
புன்னகை முகவரி
வந்தார்கள்
நண்பர்கள்
மகிழ்ச்சி
இடைஞ்சலாய் இருந்தது
துன்பம்
பார்வை மங்கியது அம்மாவிற்கு
எனக்கு மங்கலாய்த் தெரிந்தது
உலகம்
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்