தாய்மை

வயிறு பசித்தது !

வீட்டில்
உணவில்லை !

கடன்
வாங்கப்போன
அப்பா
வெறுங்கையோடு !

பசியால்
சுருண்டு போனாள்
தங்கை !

கண்களைத்
துடைத்துக் கொண்ட
அம்மா
மஞ்சள் பையை
எடுத்துக்கொண்டு
விறுவிறுவென
மளிகைக்கடைக்குக்
கிளம்பினாள் .......
அரிசி வாங்கவும் !
பருப்பு வாங்கவும் !
திட்டு வாங்கவும் !

எழுதியவர் : குருச்சந்திரன் (23-Mar-15, 2:32 pm)
Tanglish : thaimai
பார்வை : 654

மேலே