எந்த குதிரை

ஒரு நாள் காலை ஒருவன் மிகப்
பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம்
வந்தான்."டாக்டர்,இன்று காலை
தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி
விட்டேன்" டாக்டர் கேட்டார்,"என்னப்பா
இது,யாராவது குதிரையை விழுங்கு
வார்களா? ஈயை வேண்டுமானாலும்
விழுங்கி இருப்பாய்."

"என்ன டாக்டர் குதிரைக்கும் ஈக்கும்
வித்தியாசம் தெரியாதவனா நான்?
குதிரை வயிற்றில் இருந்து கொண்டு
உதைக்குது.ஏதாவது உடனே செய்யுங்கள்."
என்றான் வந்தவன்.

மனோதத்துவ ரீதியில் தான் இவரைக்
குணப்படுத்த வேண்டும் என் முடிவு செய்த
டாக்டர்,உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்தார்.அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து
சென்று மயக்க மருந்து கொடுத்தார்.தன்
உதவியாளரை கூப்பிட்டு,பக்கத்திலுள்ள குதிரை
பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை
வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த
அரை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில்
கட்ட ஏற்பாடு செய்தார்.

மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது டாக்டர்
"இதோ,இந்த குதிரை தன் உன் வயிற்றில் இருந்தது.
அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து
விட்டேன்.இப்போது உனக்கு திருப்தியா?"என்று கேட்டார்

"ஐயையோ டாக்டர் இக்குதிரை பழுப்பு நிறத்தில்
அல்லவா இருக்கிறது?நான் விழுங்கிய குதிரை
வெள்ளை நிறம் "என்றான்.டாக்டர் மயங்கி விழுந்தார்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (23-Mar-15, 5:08 pm)
Tanglish : entha kuthirai
பார்வை : 297

சிறந்த நகைச்சுவைகள்

மேலே