இளைப்பாற

பிரம்மனின்
பிழையான எழுத்துகள்
இவர்கள்
தலைவிதியானது
ஆதரிக்க
அன்பு காட்ட
எவருமின்றி
இரு இதயங்கள்
கொடுமை என்பது
இளமையில் வறுமை
அதிலும் கொடுமை
பசிக் கொடுமை
அதிலும் கொடுமை
ஆதரவு அற்றிருப்பது
அதிலும் கொடுமை
சோகங்களில்
மனங்கள் உழல்தல்
இறைவா
இரு கை நீட்டிக் கேட்குமுன்
இருப்பதை எடுத்து அளிக்கும்
இதயம் ஒன்று தா
இவர்களைப் போன்றவர்கள்
இளைப்பாற

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (23-Mar-15, 6:24 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : ilaipaara
பார்வை : 63

மேலே