மறப்பேன்-உன்னை அல்ல என்னை

விலகி செல்வதாய் முடிவினை எடுத்ததும்
என்னிடம் வந்து ஓர் வேண்டுதல் விடுத்தாள்
எது நடப்பினும் உன் எழுத்தை மட்டும் நிறுத்தாதே என
மனம் அவளிடம் சொல்ல எண்ணியது
நேற்று வரை,
என் கவிதையின் கருவாய் இருந்தவள் நீயே
இன்று அதை தனிமையில் விட்டு போகின்றாயே
இனியும் எழுதிடு கவிதை என்கிறாயே
ஆனால் அதை தாயை பிரிந்தழும் சேயாய் மாற்றி விட்டாயே
நீ விலகியதும் மறப்பேன்
உன்னை அல்ல என்னை...!!!
அதனுடன் மறப்பேன் உன்னால் நேசித்த கவியை...!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (24-Mar-15, 12:42 am)
பார்வை : 661

மேலே