உரிமை கவிதை

*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள் வெறுப்பதாகச்
சொன்னாய்.
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (24-Mar-15, 9:23 am)
பார்வை : 128

மேலே