மனிதமே நீ வாழ்க வாழ்க

மனிதமே போற்றி போற்றி ..
மாண்டுவிட்ட நிலையிலும் வாழும்
மனிதமே போற்றி போற்றி .

சாதிப் பேரைச் சொல்லித் தினம்
மனிதத்தை சங்கடப்படுத்தும் சாதியமே
ஒழிக !ஒழிக !

மூடநம்பிக்கையில் இன்னுமும்
மூழ்கிக் கொண்டிருக்கும் மூடருக்கு
பாடம் புகட்ட மனிதமேநீ
வாழ்க! வாழ்க!

மதங்களால் அடித்துக்கொண்டு வீழும்
மனிதர்களை வீறுநடை போடவைக்கும்
ஒற்றுமை குணம் ஓங்கிடவே
மனிதமேநீ வாழ்க !வாழ்க !

கோவில்களைப் போன்று குடிசைகளும்
உயர வேண்டுமென வேண்டுகிறேன்
ஆதலால் மனிதமேநீ வாழ்க! வாழ்க !

எழுதியவர் : பிரியாராம் (24-Mar-15, 3:41 pm)
பார்வை : 266

மேலே