நதினான் உனக்காய் மறக்காதே

..."" நதினான் உனக்காய் மறக்காதே ""...

மழையாய் விண்ணோடு
பொழிந்து மண்ணோடு
விளையாடும் மழலை
மக்களுக்கான நல்வரம்
நாணித்தே வளைந்து நெளிந்து !!!

பெண்மைக்கு இணையாய்
நளினமாய் நாட்டியமாடி
பாருலகெங்கும் படர்ந்தே
வறண்ட நிலம் செழித்திட
வலம்வரும் இயற்கையாய் !!!

பிறந்தயெனை இடைமறித்து
உன் அதிகார மோகத்தால்
அசுத்தமாக்கி பூமியில்னான்
இருந்திட இடம் தரமறுத்து
இருப்பதை அழித்து நீயெனை !!!

இணைத்திட போவதாய் கூறி
பிழைக்கும் வழிக்காய் கூறிட்டு
எனை சுரண்டியே நீ சுற்றியே
வளைத்ததால் வற்றினான்
வறண்ட பாலையானேன் !!!

என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (26-Mar-15, 12:51 pm)
பார்வை : 230

மேலே