காரணம் தேவை

உனை நினைத்து
எனை மறந்தேன்
எனை மறந்து
உனை இழந்தேன்
எதை நினைத்து
எனை மறுத்தாய்
எனை மறுத்து
எதைப் பெற்றாய்
எனை யேற்று
எதை இழப்பாய்
என விளக்கி
எனை விலக்கு.

எழுதியவர் : loga (27-Mar-15, 2:04 pm)
சேர்த்தது : Vinotha
Tanglish : kaaranam thevai
பார்வை : 57

மேலே