தள நட்பு

“முகத்தோடு முகம் பார்க்கவில்லை
எனினும்
தினம் உலாவரும்
நிலாவும் கதிரவனும்
நண்பர்கள்தான்!

கை குலுக்கி வளரவில்லை
எனினும்
விதையும் விளை பயிரும்
வியத்தகு நண்பர்கள் தான்!

வெற்றுத் தழுவலில்
மலரும் காற்றும் நண்பர்கள்!

வெற்றுப் பார்வையில்
நாற்றும் நிலமும் நண்பர்கள்!

வெற்று அசைவில்
ஓடமும் ஓடையும் நண்பர்கள்!

இறந்துப் போகும்
அலை ஒன்றுக்கு
கடல் அழுவதில்லை!

வீழ்ந்து போகும்
விண்மீனுக்காக
விரிவானம் கண்ணீர்
சிந்துவதில்லை!

மாறாய்
நண்பனின் பிரிவு
நாளெல்லாம் துயரக்கீற்று
சோகராகம்!

பூக்கள் யாரையும்
கேட்டுப் பூப்பதில்லை!

நாட்கள் எவரையும்
கேட்டு நகர்வதில்லை!

மாறாய்
நம் சிந்தனைக் கங்குகள்
நண்பனின் ஆலோசனை
ஊதலில்
செயல் தீயைப் பரப்பும்!
சாதனை வெப்பத்தில்
வேதனையும், சோதனையும் பொசுங்கும்!

ஆனால்
நட்பின் பிரிவில்
சாம்பல் சமாதிக்குள்
சாதனை மொட்டுக்கள்!
கங்குகளாய் கவலைகள்!

எழுதியவர் : அகன் (27-Mar-15, 3:48 pm)
பார்வை : 125

மேலே