எது கவிதை
மடியா வானத்தின்
மயக்கும் புள்ளிகளாய்
விடிந்த பொழுதுகளின்
சில்லுகள் சிதறல்களாய் .....
படியா தலையழ்கோடு
பல சுமைகளுக்கான சும்மாடோடு
அடியும் வலியும் வசவும்
அணுக்களிலெல்லாம் பெற்றும்......
பிடியரிசி சோற்றுக்காய்
பீடி ஆயிரங்கள் சுற்றியும்
வெடி மருந்துக் கிடங்கில்
வெந்திடும் விரல்களோடும் ....
நொடிதோறும் பொழுதுகளோடும்
நோய்களோடும் உழைக்க செல்லும்
வடியும் உமிழ் நீரில் கிஞ்சித்தும்
அழியா மழலை மொழி மாறா
பிஞ்சுகளின்
பகிர்ந்துக் கொள்ள இயலா
பாரங்களின் கசிவுகள்
பீச்சிடும் ஈரங்களை
பாடு தோழா...இனியாவது.,.ஒரு முறையாவது.....
..... ...