எது முடிவு

முற்றுப்புள்ளிகளுக்கு
ஒரு
முற்றுப்புள்ளி இட்டுப் பார்த்தேன்........

வீசும் காற்றுக்கு ,
------வியர்வை வீதிகளில்
------புழுங்கிச்செத்தன உயிர்முடிச்சுக்கள்...!!

மலரும் மொட்டுகளுக்கு,
------மலர்கள் இல்லா மயானச்செடியிலிருந்து
------வெறுத்து வெளியேறின வேர்கள்.....!!!

புலரும் பொழுதுக்கு,
------இருட்டின் இடுக்குகளில் ஒடுங்கி
------ஒழிந்தன வெளிச்ச விதைகள்...!!!!


ஏசும் வசவுகளுக்கு முற்றுப்புள்ளி இட்டேன்,
உரையாட இயலாமல்
உலர்ந்து கருகித் தொங்கின நாக்குகள்...!!!!!

அன்றியும்,
கவிதை வரிகளுக்கு,
------என்னை அழித்தொழித்திட ஆங்காரமாய்
------துரத்துகின்றன எழுத்துக்கள்...!!!!

..
உரையாடும் நாக்குகள்
இல்லாததாலோ...என்னவோ..
மனிதன் என்பதற்குப் பதிலாய்
தொங்கும் நாக்கோடு நாய் என்று
கூறிடவும்
நாக்குகள் இல்லாமற் போனதுவே..

பூமியெங்கும் இப்போது அமைதி..
கண்கள் வாசித்து பேசிக்கொள்ளும்
கவிதைகளோடு மட்டும்..!!!!!

எழுதியவர் : அகன் (27-Mar-15, 4:19 pm)
பார்வை : 134

மேலே