தள்ளாடும் தோனி
பக்குவமா டீமத்தான்
வழி நடத்தி......
கபில்தேவ் செயிச்சாரு.......அந்தக்காலம்....
கவாஸ்கர் ஆசியோட.........
காங்கிரஸும். துணைபோக.......
நச்சுன்னு வந்தாரே "சச்சின்"-னு
அது நம்ம ரஜினி சாரு
ஸ்டைல போல
இளமைக் காலம்......
இதையெல்லாம்
விட்டுபுட்டு டாஸ்மாக் போல
இப்போ உள்ள டீம்ஸ்பிரிட்டு
ஊர் நாறுதே.....
ஒத்த பீர அடிக்கயில
ஓவராவுதே....அத
மொத்தபேரும் பார்க்கயில
ஃபீவராகுதே.....
எக்குதப்பா நம்ம "தோனி"
மாட்டிகிட்டாரே.......
இது "இந்தியன் டீம்" என்று வேற
சொல்லிபுட்டாரே........
நம்ம டாஸ்மாக்கு காக்டெயில் போல்
சூப்பர் தாங்கோ.....கொஞ்சம்
கொறச்சலா அடிச்சுபுட்டோம்
கிக் இல்லீங்கோ.......
ஃபிக்ஸிங்கு இல்லீங்கோ......
'பிட்சு' (PITCH) லெவலுங்கோ.....
ஒரு பாலிடிக்ஸ் பண்ணவேண்டாம்....
பார்த்துக்கொள்ளுங்கோ......
தோனியண்ணே.....
தோனியண்ணே.....
மெரசலாயிட்டேன்........
ஏதோ,,,
தோணிச்சுன்னே
சொல்லிப்புட்டேன்....
மொறைச்சுக்காதீங்க..........