அந்திவேளையும் ஆம்பல் மலரும்
அந்திவேளையும் ஆம்பல் மலரும்
=================================
ஒட்டிய ஆடைக்குள்ளே கன்னஒளிவு களிப்பாட்டம்
திரவ இதழ்களும் நெஞ்சுசூட்டும்
தணிந்திருக்கவில்லை ம்ம்ம் ,,,
அந்த சைபர்மரத்தின் ஆணிவேர்வரை
நனைத்துக்கொண்டிருந்தன
அந்த சுனைச்சிட்டுகளின் உஷ்ண ஊற்றுகள்,,,,,,!!!!
பாழ்நிலத்தைக்கீறி
புறமெட்டிய முளைகற்களுக்கு
கூரறுந்த கொண்டை முளைத்திருக்கிறதுபோல
அற்பம் மிளிர்ந்து தோய்ந்த
சாயலினூடேயே
என் அச்சரங்களின் பிறப்புவிழாவும் ம்ம்ம்ம்,,,,,,,,,,!!!
ஆனிக்கல் குவியலில்
அரை உயிராய் மின்னி மின்னி
அழுதுக்கொண்டிருந்தது
அடுத்தநொடி அணையப்போகிற
மின் குமிழியும்
அறுந்துதொங்கிய அம்மின்சாரகம்பியிழையும்
தாழம்ப்பூ நாற்றங்கமழ
பீலிக்குடையின் நிறக்கூட்டில்
அவ்விரு நாகங்களும்
நெளிவு நோகாமல் புணர்ந்துகொண்டிருந்தன
யார் சொன்னார்கள்
பறவைகளுக்கு நவீன நாகரீகம் தெரியவில்லை என்று
இப்போதிய பறவை கூடுகளெல்லாம்
புற்பூண்டு, ஓலைகளின்
கத்தரித்த வேயல்களற்று
கம்பிக்கூடுகளாகத் தெரிகின்றன,,,,,,,!!!
காதலும் காற்றின் வருடுதலும் ஒன்றுதான்
என்னும் உவமையை
என் ஏகாந்த கலாபனைகளால்
பொய்யாக்கமுயன்று
சலனங்களற்ற கரைமுகட்டில்
இதுகாறும் கண்டிறாத
கற்பனை நடமாட்டங்களுக்கு
சமிக்கைகள் ஊகித்து
"மீள்மவிரிசில்"களால் ஒப்பனைசெய்தபடி
தோற்றுக்கொண்டிருந்தேன் ஆம்,,,,,,,,,!
அக்குளத்தங்கரை ஆர்ந்த
குட்டி ஆம்பல்களின் கூட்டத்தினிடையே
அன்றுதான் பூப்படைந்ததுபோல
நாளம் நீண்டு வளர்ந்த
அந்த இளஞ்சிவந்த பொன்னாம்பலில்தான்
வதனம் புதைந்திருந்தாள்
அவளின் வரவு பொய்த்ததாய்
புலம்பிக்கொண்டே
திடுக்கென்ற என் திரும்புதலில் ம்ம்ம்ம்,,,
அனுசரன்