பாப்பா பாட்டு - உதயா
பாப்பா பாப்பா
சின்ன பாப்பா நான்
சொல்லுறத கொஞ்சம்
கேளு பாப்பா
நாட்டுல எல்லா நல்லா இல்ல
திரும்புற பக்கமெல்லா தொல்ல
தட்டி கேக்க கிட்ட போனா
உம்மேல வரும் பழி கொள்ள
இப்போயெல்லாம் பொண்ணுக்கெல்லாம்
பகல்லே பாதுகாப்பு இல்ல
இதமாத்த நெனச்சா போதும்
ஒழிந்சே போகும் தொல்ல
எப்போ பாத்தாலும் கணினியிலே
விளையாடறதா கொஞ்சம் நிறுத்தனும்
நொண்டி கபடி ஓடிபிடித்தல்
விளையாட கொஞ்சம் பழகிக்கணும்
நாட்டுல அமைதி தொலைஞ்சே போச்சி
நாடே இங்க சுடுகாடாச்சி
நம்ம உரிமையெல்லாம் செத்தே போச்சி
ஆட்சியும் இப்போ சாத்தாகிட்ட போயாச்சி
நாட்ட ஆளும் பதவிக்கு போக
நல்லா இப்போவே படிச்சிக்கோ
நாலு பேர திருத்தி பூட்டா போதும்
அப்புறம் நாடே திருந்திக்கும் தெரிஞ்சிக்கோ
வனத்தில பூக்கும் மொத பூவாக
நாம தான இருக்கணும்
இந்த நாட்டுல நடக்கும் கெட்டதஅழிக்க
புது அவதாரமும் நாமதா எடுக்கணும்
நல்லா படிச்சி வக்கீலானா
நயவஞ்சகரையும் திருத்தலா
காக்கி சட்ட போடும் காவல்துரையானா
நாட்டையே சுத்தமாக்களா
மருத்துவம் படிப்ப முடிச்ச பிறகு
நம்ம நாட்டுக்கே உழைக்க நெனைக்கணும்
ஏழைக்கெல்லாம் இலவசமாக
மருத்துவம் செய்ய துடிக்கனும்
நம்ம நாட்டுக்கு எதனா செய்ய நெனைச்சா
பதவியில இருந்து செய்ய நெனைக்கணும்
நம்ம செய்ய நினைக்குறத மனசுலவெச்சே
தினமும் நல்லா படிக்கணும்