என் அன்புக் காதலி

அந்திவானம் சிவக்க
சூரியன் ஓய்வெடுக்க தொடங்கும்
அந்த அழகிய மாலைப்பொழுதில்
கால நேரம் அறியாது
என் தோளில் சாய்ந்தபடி இருந்தாள்
"நேரமாச்சு வா போகலாம்" என்றழைக்கவும்
கண்ணீர் துளிகளால் என்னை நனைத்தாள்
காரணம் தெரியாது நான் பாா்க்க
"என்னை விட்டு போயிடுவியாடா" -என
அப்பாவியாய் கேட்டவளை
'அடி பைத்தியமே!
நீயின்றி எனக்கு ஏது வாழ்வு?'
என சொல்லியபடி அணைத்தேன்;
என் வாழ்வின் அன்புக்கு அடிப்படை
-அவள் மட்டும் தானே
""என் அன்புக் காதலி""

எழுதியவர் : ஷாமினி குமார் (27-Mar-15, 7:36 pm)
Tanglish : en anbuk kathali
பார்வை : 134

மேலே