அன்பு தோழி சத்யாவிற்கு -சகி

அன்பு தோழிக்காக ....

என் அன்பு தோழியவள் ...

அம்மயிலின் அழகு
முகம் இன்னும் கண்டதில்லை ...

அக்குயிலின் குரலிசை
மட்டும் கேட்டுள்ளேன் ....

முகவரி மட்டும் இருவருக்கும்
எழுத்து தளமே ...

அன்பினை நட்பெனும்
சாரல் மழையில்
தூது விடுகிறாள்....

கண்கலங்கும் நேரங்களில்
மயில் இறகாய் வருடி
விடுகிறாள் ஆறுதலான
வார்த்தைகளில் ...

பெயருக்கு பழகி
செல்லும் உறவுகளுக்குமுன்
நட்பெனும் உறவுக்காக
பழகும் பதுமையவள் ....

தாயாக தோள்
கொடுப்பவள் என்
இன்ப துன்பங்களை புதைக்க ...

மணவாழ்க்கை இனிதே
அமைய வேண்டுகிறேன் என்
அன்புத் தோழியவளுக்கு ....

நல்வண்ணமாய் நல்லறம்
அமைய வாழ்த்துகிறேன் ....

மணமாலை அவள் சூட
பெண்தோழியாய் அவளருகில்
நான் வேண்டும்.....

இன்றல்ல என்றுமே
நம் நட்பு தொடரும் வரம்
வேண்டுமடி தோழி....

(என் அன்புத்தோழி கிரி சத்யாவிற்கு சமர்ப்பணம்....)

எழுதியவர் : சகி (28-Mar-15, 3:36 pm)
பார்வை : 216

மேலே