என் வேண்டுதல்

மூடி வைக்கும்
அங்கங்களை விழிகளாலே
ஊடுருவி பார்க்கிறாய்...
என் கண்ணியத்தை
கட்டவிழ்க்க முடியாதென
அறிந்து கொண்டு என்
முகத்திற்கு ஒரு
நிர்வாண உடலை தேர்ந்து
எடுக்க முடிவு கட்டிவிட்டாய்...
அன்று திரௌபதியின்
துகில் உருவிய போது
அவளை காக்க கண்ணன்
வந்தான்... இன்றோ
எனக்கு தெரியாமலே
என்னை வேசி ஆக்கும்
உன் விஞ்ஞான மூளையை
எதிர்த்து நிற்க
எந்த கண்ணனுக்கும்
திராணி இல்லாமல்
போய் விட்டது...
நான் எப்படி நிருபிப்பேன்
என் கற்பினை என்று
இன்றிலிருந்தே யோசிக்க
ஆரம்பித்து விட்டேன்....
இன்று கண்ணகியாய்
பிறந்தாலும் கூட
அவளையும் உன்
மார்பிங்கில் கற்பிழக்க
செய்ய முடியும்
என்று மமதையில்
திரியும் உன்னை
என்ன செய்வது
என்று அறியாமலே
கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறேன்...
அந்த ஆண்டவன் மட்டும்
எனக்கு வரம் ஒன்றை
கொடுத்திருந்தால் உன்னை
பெண்ணாய் மாற்றி
பெண்மையின் தவிப்பினை
உணர்த்தி இருப்பேன்...
என்ன செய்வது
அடுத்த ஜென்மத்திலாவது
நீ பெண்ணாய் பிறக்க வேண்டும்
என்று பேதையாய் வேண்டி
கொண்டு இருக்கிறேன்...

எழுதியவர் : இந்திராணி (29-Mar-15, 11:56 am)
Tanglish : en venduthal
பார்வை : 104

மேலே