நம் செல்ல குழந்தைகளை காப்போம் - கலாசாரம் = மை சூ பாண்டியன்

கேளுங்கயா கேளுங்கம்மா என் இனிய மக்களே
தயவாய் இதை கேளுங்க தவறிருந்தா மன்னியுங்க
ஆணுறையாம பெண்ணுறையாம்
அவசியமெனில் அணிவீரே! .தேவை
அது முடிந்தபின்பு -
அதை தெருவில் போடாதீர்
அரும்புகளும் அதை ஊதீ
அர்த்தம் தேடித் அலைந்திடுமே ..
இரவுகென்றுப் இரவு உடை உள்ளவரே
இல்லத்திலே பெண்டீர் நீங்கள் அணிவீரே ..
இதை அழகாய் அணிந்து கொண்டு அதனோடே
இருப்பு சந்தை தயவு செய்து செல்லாதீர்-
இருப்பு சந்தை அதனோடு செல்வதனால்
இச்சையினை அயாலாருக்கு தூண்டுவீரே
..
தள்ளுவண்டித் தோழர்களே கேட்டிடுவீர்
பள்ளிகூட குழந்தைகளை பார்த்திடுவீர்
பசிக்கு வாநகும் பலகாரம் தெரிந்து விற்பீர்
தரம் தாழ்ந்த பண்டம் என்றால் விற்காதீர்
குழந்தைகளின் நலம் காக்க தவறாதீர்..
.
மாடி வீட்டு வாசிகளே கேட்டிடுவீர்
மாடிலிருந்து குப்பைளை வீசிடாதீர்
அறியாமல் நீங்கள் அதை வீசுவதால்
விரைந்து செல்லும் மக்களின் மேல் விழுந்திடுமே
விபத்துகளும் விபரீதங்களும் நிகழந்திடுமே
பாதிக்க பட்டோர் நம் உறவென்று உணர்திடுவீர்
குப்பைகளைத் குப்பை வண்டியில் போடப் பழகிடுவீர்..
நன்மைக்கென்றுப் இதை நீங்கள் புரிந்திடுவீர் - நம்
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர்...
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம் சுற்றுப்புறம் காத்திடுவீர்..
எழில் கொஞ்சும் பாரதத்தை உருவாக்க உதவிடுவீர் ...
எதோ எனக்கு தோணிச்சுங்க இப்ப மன பாரம் நல்லாய் குறைஞ்சதுங்க ,
மை சூ பாண்டியன்