இனிய பெண் குரல்
இந்த ஏப்ரலிலாவது
முதல் நாளாவது
முட்டாளாகக் கூடாது ..
என்று எண்ணியபடி
படுக்கைக்கு சென்றேன்..
வர வர அருமையா
கவிதை எல்லாம்
எழுதுறீங்க போல..
என்ற குரல் கைப்பேசியில்
அழைத்து சொல்லிவிட்டு..
அட்வான்ஸ் முட்டாள்கள் தின
வாழ்த்துக்கள்..இனிமேலாவது
ஒழுங்கா எழுதுங்கள்..
என்று இழைந்து சொல்லி
பட்டென்று போனை
வைத்து விட்டது ..
அந்த இனிய பெண் குரல் ..
இப்படி ஒரு கனவு
இரண்டு நிமிட தூக்கத்தில்..
கனவு தான் நிஜமோ ..
தூக்கம் போச்சே !