மணக்கும் வாழ்வும் நந்தவனமாய்
சிந்திடும் புன்னகை தந்திடும் இன்பம்
வந்திடும் வலிவும் நெஞ்சினில் - அன்றியும்
பிறக்கும் தெளிவும் நிலைக்கும் நம்மிடம்
மறக்கும் கவலைகள் நிச்சயம் !
மகிழும் இதயமும் மலர்ந்திடும் வாசமுடன்
மணக்கும் வாழ்வும் நந்தவனமாய் - அஃதன்றி
நீடிக்கும் ஆயுளும் நிகழ்வுகள் இனித்திடும்
சுவைத்திடும் தேன் அமுதாய் !
குளிர்ந்த நெஞ்சால் புலர்ந்திடும் பொழுதுகள்
புத்துணர்வு ஊட்டிடும் நாளும் - இவையன்றி
புதுப்பாதை காட்டிடும் புதுவாழ்வு அமைந்திட
புத்துயிர்வு பெற்றிட்ட பிறப்பாய் !
சாதிமத சகதியில் வீழாமல் வாழ்ந்திடுவோம்
தாய்மொழி உணர்வுடன் உலகில் வாழ்வோம் !
பகுத்து அறிந்திடும் பண்புடன் வாழ்ந்திடுவோம்
உதவிடும் உள்ளமுடன் உள்ளவரை வாழ்வோம் !
பழனி குமார்
( படம் - முகநூல் பதிவிறக்கம் )