உன் கைக்கும் வேலை உண்டு

சுட்டெரிக்கும் தன்
தன்மானத்தை மூட்டையாய்
கட்டிக் கொண்டு
உருக்குலைந்த ஊனை
பொருட்டாக எண்ணி
மூலையில் முடங்காமல்
இன்றாவது தன்
வாழ்வில் விடியல் வராதா
என்ற எதிர்பார்போடு
உன் கையை நம்பி
காலையிலேயே கிளம்பி
கோயில் வாசலிலும்
தெருக்களிலும் தன்
சுயமரியாதையை விற்று
கொண்டிருக்கும் பிச்சைகாரர்களுக்காக
தான் இன்று உன் விடியல்
புலர்ந்திருக்கிறது என்று
எண்ணி கொண்டு
எழுந்து கொள்-உன் கைக்கும்
இந்த உலகில் வேலை
இருக்கிறது....

எழுதியவர் : இந்திராணி (1-Apr-15, 4:42 pm)
பார்வை : 188

சிறந்த கவிதைகள்

மேலே