என்னவளைத் தேடி

என்னவளைத் தேடி...
ஒரு நாள்

அந்த கிறிஸ்தவ ஆலய வாசலில் முன் -
மரித்து உயிர் பெற்று எழுந்த
அந்த ஏசுவின் மேல் ஆணை
நீங்களே என்புருஷன் என்றாய் நானோ
அந்த ஏசுவை விட்டு விட்டு என்னோடு வா என்றேன்
ஆனால் நீயோ மறுத்து விட்டாய்

அந்த மசூதி மங்கையோ
தனது வசதியான வாழ்வை
எனக்காகத் துறக்கத் துணிந்தாள்
ஆனால் அந்த மசூதியை மறக்க மறுப்புத் தெரிவித்தாள்

ஆசையே அழிவுக்குக் காரணம்
இதை ஜெபிப்பவர்கள் நாங்கள்
உங்களைக் காதலிப்பது என்பது...
குற்றமாக நினைக்கிறேன் என்றாள்
அந்த மஞ்சள் முகத்தழகி

நிர்வாணமாக இருப்போம்
நான் உங்களைக் காதலிக்கிறேன்
ஆனால் மகாவீரரே நம் கடவுள் என்று
மண்டியிட்டாள் ஒருத்தி

குருநானக்கின் குலம் தழைக்க வேண்டுமானால்
உங்களை மணந்து குலாவுகிறேன் என்றாள்
அந்த சீக்கியச் சாதுர்யக்காரி

நான் ஒரு இந்து என்று சொல்லிக்கொண்டு
என்னிடம் வந்த அந்த இள மங்கை
என்னைப் பார்த்து
நிற்பாயா
உட்காருவாயா
படுப்பாயா என்றாள்
என்ன என்று வியப்பால் வினவிய போது
திருமண்ணாய் நிற்பாயா
திலகமாய் உட்காருவாயா
திருநீறாய் படுப்பாயா என்றாள்

என்னவளைத் தேடிய என்னைப் பார்த்து
எனது நரை நகைக்கிறது

(கொசுறு : விழிப்புணர்வு விழிப் புணர்வு பொதுச் சொத்து...காதல் !)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (2-Apr-15, 12:06 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 78

மேலே